Search

Sunday, September 28, 2014

உருத்திராக்கம் அணிவதால் கிடைக்கும் பலன்கள்



உருத்திராக்கம் வெறும் நாகரீகத்திற்காக அணிகிற அணிகலன் அல்ல. எங்கெல்லாம் உருத்திராக்கம் வணங்கப் படுகின்றதோ அங்கெல்லாம் திருமகள் உறைகிறாள். உருத்திராக்கத்தை அணிவதால் ஒருவர் அகால மரணத்திலிருந்து தப்பலாம். உருத்திராக்கம் குண்டலினியை (ஆதம இன்ப முனை) எழுப்புவதில் துணை புரிகின்றது. இவ்வுலகப்பேறு, விண்ணுலகப்பேறு ஆகியவற்றை அடைவதில் உருத்திராக்கம் உதவுகின்றது. இது முழுக் குடும்பத்தையும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழச் செய்யும்.

உருத்திராக்கம் ஓர் ஆபூர்வமான மூலிகைப் பொருள் என்பது ஆராய்ச்சியாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும். உருத்திராக்கம் அதனுடைய உயிரியல் மருத்துவப் (Bio-medical) பண்புகளுக்கும், மன அழுத்தம், அதி உயர்ந்த இரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் தன்மைக்கும் பெயர் போனது.
உருத்திராக்கம் சுய ஆற்றலையும், சுய அன்பையும் மேம்படுத்த உதவும். அணிவோரின் உள் ஒளியை இது மேலோங்கச் செய்கிறது. இது பெரியம்மை, காக்காய் வலிப்பு, கக்குவான் போன்ற பல்வேறு அபாயகரமான நோய்களைக் குணப்படுத்த வல்லது. குறிப்பிட்ட முறையில், மருத்துவ விதி முறைகளைக்கேற்பக் கையாளப்பட்டால் இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த புண்களையும் கூடக் குணப்படுத்தும்.
இது அணிவோருக்கு மன அமைதியையும், மன ஊக்கத்தையும், புத்திக் கூர்மையும் அளிக்கிறது. 38 வகையான உருத்திராக்கத்தில், 21 வகை மிக பிரசித்தம். முகத்தைப் பொறுத்தே ஒரு முகம், இரு முகம் என்று வரிசைப் படுத்தப்படுகிறது. ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு.
ஒரு முகம்

மந்திரம் - ஓம் நமச்சிவாய, ஓம் ஹரீம் நமஹ 
ஒரு முகமுடைய உருத்திராக்கம் சூரியனால் ஆளப்படுகிறது. இந்த உருத்திராக்கம் ஏனைய எல்லா முகங்களையுடைய உருத்திராக்கங்களுக்கும் அரசனாகையால்,இது தூய உணர்வைக் (Pure consciousness) குறிக்கிறது. அணிபவருக்குப் போகமும் மோட்சமும் கிட்டும். இவர் ராஜா ஜனகர் போன்று வாழ்வர். இவர் வேண்டும் போது எல்லா சுகங்களையும் அனுபவிப்பர். எனினும் பற்றற்றவராய் இருப்பர். ஒரு முகத்து உருத்திராக்கம், நோய்களைச் சரியாகக் கண்டறிவதற்கும், அறுவை சிகிச்சையில் வெற்றி பெறுவதற்கும் உதவுவதால் மருத்துவர்களுக்கு இது மிகவும் உகந்ததாகும்.

இரண்டு முகம்

மந்திரம் - ஸ்ரீ கௌரி சங்கராய நமஹ, ஓம் நமஹ 
இரு முகமுடைய உருத்திராக்கத்தை ஆளும் கோள் சந்திரன். இது பகவான் சிவனும், தேவி பார்வதியும் (சக்தி) இணைந்த உருவமான அர்த்த நாரீஸ்வரரைக் குறிக்கிறது. (மாதொரு பாகன்) இந்த உருத்திராக்கம் அணிவோருக்கு 'ஒற்றுமை' (unity) உணர்வை அளிக்கும். இந்த ஒற்றுமை குரு-சிஷ்யன், பெற்றோர்-குழந்தைகள், கணவன்-மனைவி, நண்பர்களிடையே உள்ள தொடர்பைக் குறிக்கலாம். ஒருமைத் தன்மையை நிலை பெறச் செய்வது இதன் தனித்தன்மையாகும்.

மூன்று முகம்

மந்திரம் - ஓம் கிளீம் நமஹ
இந்த மும்முகமுள்ள உருத்திராக்கதை ஆளும் கோள் செவ்வாய்.இது தீக்கடவுளை குறிக்கிறது. எல்லாப் பொருட்களையும் உண்ட பின்னரும் தீ தூய்மையாக இருப்பது போல் மூன்று முகமுள்ள உருத்திராக்கத்தை அணியவரும் அருள் கிட்டிய போது, தனது வாழ்க்கையில் பாவங்களில், தவறுகளிலிருந்து விடுபட்டுத் தூய நிலையை அடைகின்றார். இந்த மூன்று முக உருத்திரக்கம் தாழ்வு மனப்பான்மை (Inferiority Complex) உள்ளார்ந்த பயம் (Subjective fear) குற்ற உணர்வு (Guilt) மனச்சோர்வு போன்றவற்றால் துன்பப்படுபவர்களுக்கும் உகந்ததாகும்.

நான்கு முகம்

மந்திரம - ஓம் ஹரீம் நமஹ
இந்த நான்கு முகமுள்ள உருத்திராக்கத்தை ஆளும் கோள் புதன். இது பிரம்மனைக் குறிக்கிறது. அணிவோருக்கு அருள் கிடைத்த போது ஆக்க சக்தி கிட்டுகிறது. மாணவர்கள், அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு நற்பயன் அளிக்க வல்லது. ஞாபகசக்தி, கூர்ந்த மதி புத்தி சாதுர்யம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. நான்முக உருத்திராக்கங்கள் மூன்றினை வலது கையில் கட்டினால் அவர் முன் யாரும் எதிர்த்து நிற்க முடியாது.

ஐந்து முகம்

மந்திரம் - ஓம் ஹரீம் நமஹ
ஐந்து முகங்களுடைய உருத்திராக்கத்தின் ஆளும் கோள் வியாழன். இது மங்களகரத்தின் குறியீடான சிவனை குறிக்கும். இந்த ஐந்து முகமுடைய உருத்திராக்க மாலை அணிதோருக்கு உடல் நலம், அமைதி ஆகியன கிட்டும். இது ஒருவரின் இரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவற்றைக் கண்காணிக்கிறது. இந்த உருத்திராக்க மாலையை ஜபம் செய்வதற்கும் பயன்படுத்துவர். இந்த மாலையை அணிவோருடைய மனம் அமைதியாக இருக்கும். அத்துடன் இதை அணிபவர்களுக்கு அகால மரணம் ஏற்படாது என்பதில் சந்தேகம் ஏதுவுமில்லை.

ஆறு முகம்

மந்திரம் -ஸ்வாமி கார்த்திகேயாய நமஹ
இந்த ஆறு முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் வெள்ளி. இந்த உருத்திராக்கம் சிவனின் இரண்டாவது மகனான கார்த்திகேயக் கடவுளைக் குறிக்கும். இதை அணிந்து வேண்டியோருக்கு அறிவு, மேம்படுத்தப்பட்ட புத்தி, மனத்திட்பம், திடமான மனம் ஆகியவை அருளப்படும். இந்த ஆறு முக உருத்திராக்கம், மேலாளர்கள், வணிகர்கள், நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள், ஆகியோருக்கு உகந்தது. இது ஒருவரின் பிறப்புறுப்புகளை ஆள்கிறது.

ஏழு முகம்

மந்திரம் - ஓம் மஹா லட்சிம்யை நமஹ ஓஅம் ஹீம் நமக
இந்த ஏழு முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் சனி. இது தேவி திருமகளைக் குறிக்கும். இதை அணிவோருக்கு நல்ல உடல் நலம் அருள் பாலிக்கப்படும். உடல் தொடர்பான துன்பங்கள், நிதித் தொல்லைகள், மனத் துன்பங்கள் ஆகியவற்றால் வருத்த முற்றிருப்போர் இந்த உருத்திராக்கத்தை அணிதல் வேண்டும். இந்த ஏழு முக உருத்திராக்கத்தை ஒருவர் அணிவதால் அவருக்கு வணிகம், பணி ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படுத்துவதுடன் அவர் மகிழ்வாகக் கழிக்க முடிகிறது.

எட்டு முகம்

மந்திரம் - ஒம் ஹீம் நமஹ, ஓம் கணேஷாய நமஹ
இந்த எட்டு முகமுடைய உருத்திராக்கத்தின் ஆளும் கோள் இராகு. இது பகவான் கணேசரைக் குறிக்கிறது. இது முயற்சிகளிலும் தடைகளை நீக்கி வெற்றியைத் தருகிறது. அணிவோருக்கு ரித்திகள் (Riddhis), சித்திகள் (Siddhies) ஆகிய எல்லாப் பேறுகளையும் அளிக்கும். இதை அணிவோரின் எதிரிகள் அழிந்து போவார்கள். அதாவது இவர்கள் எதிரிகளின் மனத்தையும், நோக்கங்களையும் இந்த உருத்திராக்கம் மாற்றி விடும்.

ஒன்பது முகம்

மந்திரம் - நவ துர்க்காயை நமஹ, ஓம் ஹரீம் ஹும் நமஹ
இந்த ஒன்பது முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் கேது. இது தேவி துர்க்கையைக் (சக்தி) குறிக்கிறது. இதை அணிந்து வணங்குபவர்களுக்கு அன்னைக் கடவுள் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வதற்கு அதிக சக்தி, ஆற்றல், செயல் திறம், அச்சமின்மை ஆகியவற்றை அளிப்பாள்.

பத்து முகம்

மந்திரம் - ஸ்ரீ நாராணாய நமஹ,ஓம் ஹ்ரீம் நமஹ
இந்த பத்து முகமுள்ள உருத்திராக்கத்திற்கு ஆளும் கோள் என்று ஒன்றுமில்லை. கோள்களினால் ஏற்படும் தீய பலன்களையும் இது சாந்தப்படுத்தும். பத்துத் திசைகளினதும், பத்து அவதாரங்களிலும் செல்வாக்கு இந்தப் பத்துமுக உருத்திராக்கத்தில் உண்டு. ஒருவரின் உடலுக்கு இது கேடயம் போல் செயல்பட்டு, எல்லாத் தீய சக்திகளையும் விரட்டுகிறது. இதை அணிந்து வணங்குவோர்களுடைய குடும்பம் பரம்பரை பரம்பரையாகச் செழிப்புற்று வாழும்.

பதினோரு முகம்

மந்திரம் - ஒம் ஸ்ரீ ருத்திர நமஹ, ஒம் ஹரீம் நும் நமஹ
இது பகவான் அனுமானைக் குறிக்கும். இது வணங்கி வேண்டியோருக்கு அறிவு, நேர்மையான நீதி ஆற்றல் மிக்க சொல்லாட்சி, துணிவுள்ள வாழ்க்கை, வெற்றி ஆகியனவற்றை அருளும். எல்லாவற்றிற்கும் மேலாக, விபத்தினால் மரணம் ஏற்படுவதை இது தடுக்கும். இதை அணிவோர் அச்சமற்றவராக ஆவார். தியானத்திற்கும் இது உதவும்.

பன்னிரண்டு முகம்

மந்திரம் - சூர்யாய நமஹ ஓம் க்ரோன் க்ஷோண் ரவுண் நமஹ
இது சூரியக் கடவுளைக் குறிக்கும். இதை அணிவோர் அளவற்ற நிர்வாகத் திறனைப் பெறுவர். அத்துடன் சூரியனின் குணங்களையும் பெறுவர். இக்குணங்களால் ஒருவர் என்றும் பிரகாசிக்கும் ஒளியுடனும், பலத்துடன், பிறரை ஆட்சி செய்து வருவர். இந்தப் பன்னிரண்டு முக உருத்திராக்கம் மந்திரிகள், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், வணிகர்கள், நிர்வாகிகள் போன்றோருக்கு உகந்தது. இது வியக்கத்தக்க வகையில் பயனளிக்க வல்லது.

பதின்மூன்று முகம்

மந்திரம் - ஓம் ஹரீம் நமஹ
இது இந்திரனைக் குறிக்கும். தொழுது வேண்டியவர்களுக்கு மனிதன் விரும்பத்தக்க எல்லா சுகங்களையும் இது அளிக்கும். செல்வம், மாட்சிமை ஆகியவற்றை அளிப்பதுடன் உலகத்து ஆசைகள் அனைத்தும் இது நிறைவேற்றும். அத்துடன் அஷ்டமா சித்திகளையும் இது அளிக்க வல்லது. இதை அணிவோரை காமக்கடவுள் விரும்புவர். மகிழ்ச்சி அடைந்த காமக்கடவுள், அணிவோருக்கு உலகத்து ஆசைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்.

பதினான்கு முகம்

மந்திரம் - ஓம் நமஹ சிவாய
இந்தப் பதினான்கு முகமுடைய உருத்திராக்கமே அதி உயர்ந்த விலை மதிப்பற்ற தெய்வீக மணியாகும். அதுவே தேவ மணியுமாகும். இந்த உருத்திராக்கம் அணிவோருடைய ஆறாவது புலனை விழிக்கச் செய்கிறது. அதனால் அவர் எதிர்கால நிகழ்வுகளை முன் கூட்டியே அறிகின்றார். இதை அணிவோர் தாம் எடுத்த முடிவுகளில் ஒரு போதும் தோல்வியடைவதில்லை. இதை அணிவோர் இடர்கள், துன்பங்கள், கவலைகள் எல்லாவற்றையும் கடந்து விட முடிகிறது.மேலும், அணிவோருக்குப் பாதுகாப்பையும் எல்லாச் செல்வங்களையும் இது கொடுக்கிறது.

பதினைந்து முதல் இருபத்தொன்று வரை உள்ள முகங்கள் பண்டையக் கால முனிவர்கள் இந்த உருத்திராக்க மணிகளை பூஜை மேடையில் வைக்கும்படியும் அதன் வழி முழுக் குடும்பத்திற்கும் செழிப்பைக் கொடுக்கின்றன. பகவான் உருத்திரனின் அருளைப் பெறும்படியும் அறிவுரை கூறியுள்ளனர். இப்படி ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு.
கௌரி சங்கர்
மந்திரம் - ஓம் கெளரி சங்கராய நமஹ
இயல்பாகவே ஒன்றாக இணைந்த இரு உருத்திராக்கங்கள் கௌரி சங்கர் என அழைக்கப் படுகின்றன. இது சிவனும் பார்வதியும் சேர்ந்த உருவானதாகக் கொள்ளப் படுகின்றது. இது கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள உதவுகிறது. எனவே இந்த உருத்திராக்கம் குடும்பத்தில் அமைதியும் சுகமும் விளங்க வைக்கும் சிறந்த பொருளாக கருதப்படுகிறது. கௌரி சங்கர் உருத்திராக்கத்தை ஒருவர் வழிப்படும் இடத்தில் வைத்துத் தொழுது வந்தால் அவருக்கு ஏற்படும் துன்பம், வேதனை, உலகியல் தடைகள் எல்லாம் அழிகின்றன. குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் மேலோங்குகின்றன. உருத்திராக்கத்தை 3, 4, 5, 6, எண்ணிகையில் வளையமாகக் கோர்த்து அணிவர். கழுத்தில் அணியும் மாலைகள் 27, 54, 108 என்ற கணக்கில் இருக்கும். கழுத்தில், கையில் அணியும் உருத்திராக்கம் அங்குபங்சர் போல் செயல்பட்டு பயன் அளிக்கும்.


செல்போன் கதிர்வீச்சு


செல்போன் கதிர்வீச்சு நம்மை தாக்காதவாறு தடுக்க சில வழிமுறைகள்


கண்டிப்பாக இந்த தலைமுறையினர் பெரும் பாக்கியம் பண்ணி இருக்க வேண்டும். எவ்வளவு சொகுசான வாழ்க்கை எந்த மூலையில் நடந்தாலும் அதை உடனே அறிய தொலைகாட்சிகள், இடம் விட்டு இடம் பெயர சொகுசு கார்கள், தகவலை ஒரு ஒரே நொடியில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தெரிவிக்க போன் வசதி அதிலும் செல்போன்கள் வசதி இன்னும் பிரமாதம் பெரும்பாலானாவர்கள் இந்த செல்போன்களுக்கு அடிமையாகவே ஆகிவிட்டனர். இதில் உள்ள வசதிகளால் இந்த செல்போன்கள் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து கொண்டுள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த செல்போன்களில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இந்த செல்போன்களின் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது. இந்த செல்போன் கதிர் வீச்சினால் மூளையில் இரண்டு வகையான (Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் செல்போன் உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விஷயம் நாம் செல்போன் உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.

இந்த செல்போன்களின் கதிர்வீச்சில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது என்று சில வழிமுறைகளை கீழே காண்போம்.
முடிந்த அளவு செல்போன்கள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் செல் போன்கள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட செல்போன்கள் பாதிப்பு அதிகம்.

ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும். 
குழந்தைகளிடம் செல்போனில் பேசுவதோ,கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.

உங்கள் மொபைலில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.
காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட செல்போன்களின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும். 

நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஆன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்ப்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.

செல்போன்களில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.

செல்போன்களில் விளையாடுவதை முடிந்த அளவு தவிற்க்கவும் முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

செல்போன்களை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.

செல்போன்களை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம். 

போனில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.

மேற்கூறிய முறைகளை கடைபிடித்தால் கண்டிப்பாக செல்போன்களின் கதிவீச்சில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.



பிறக்கப்போவது ஆனா?? பெண்ணா???



ஸ்கேனிங் மருத்துவ தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே நம்மாளுங்க பிறக்கபோவது ஆனா? பெண்ணா? என்று சொல்லி இருக்கிறார்கள்...
நீங்களும் சோதித்துப் பாருங்கள்..
குறுக்கு வட்ட கட்டங்களில் தாயின் வயது கொடுக்கப்பட்டுள்ளது. நெடுக்குள்ள கட்டங்களில் குழந்தை உண்டான (கருத்தரித்த) மாதங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது, "X" என்பது ஆண் குழந்தையையும், "O" என்பது பெண் குழந்தையையும் குறிப்பிடுகிறது.
உதாரணமாக 27 வயது தாய் ஜனவரி மாதம் கருத்தரிக்கிறாள் என்றால் பிறக்கப் போகும் குழந்தை பெண் குழந்தையாக இருக்கும்.
இந்த அட்டவணையின் பலனுக்கு 99% உத்தரவாதம் என்கிறார்கள்.
இந்த அட்டவணையின் ஒரிஜினல் சைனாவின் ராஜ குடும்பத்து நினைவு சின்ன ஸ்தூபியின் அடியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு இப்பொழுது பீஜிங்கில் உள்ள விஞ்ஞான கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.