சென்னையில் ஒரேநாளில்
7,000 பஸ்கள் இயக்கம்
சென்னை: தமிழகம் முழுவதும்
தீபாவளிப்
பண்டிகை இன்று கோலாகலமாக
கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, மாநிலம் முழுவதும்
9,088 கூடுதல் அரசு சிறப்பு பேருந்துகள் கடந்த
17ம் தேதி முதல்
இன்று அதிகாலை வரை இயக்கப்பட்டன. இதில்
சென்னையில் மட்டும் 4,753 பஸ்கள் ஆகும்.
தவிர மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில்
தீபாவளி வரை தினசரி 200 பேருந்துகளும்
கூடுதலாக இயக்கப்படுகின்றன. கடந்த 4
நாட்களாக சென்னையில்
தொடர் மழை பெய்து வரும்
நிலையில், சிறப்பு பேருந்துகள் அனைத்திலும்
பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தன.
இந்நிலையில் நேற்று மழை விட்டவுடன் பயணிகள்
கொஞ்சம் கொஞ்சமாக
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு வர
துவங்கினர். நேற்று மாலை 3 மணிக்கு மேல்
இன்று அதிகாலை 4
மணி வரை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில்
பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக,
தென்மாவட்டங்களான மதுரை,
திருநெல்வேலி, நாகர்கோயில் உள்ளிட்ட
பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் கூட்டம்
அதிகமாகவே காணப்பட்டது.
சிறப்பு பேருந்துகள் வேறு இயக்கப்பட்டதால்,
பஸ்கள்
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வரவே சுமார்
45 நிமிடங்கள் நீடித்தது. இருந்தாலும் மைக்
மூலம் அறிவித்தது, நடைமேடை சீட்டு,
பஸ்களை முறைப்படுத்தியது உள்ளிட்ட
நடவடிக்கைகளால் குழப்பம்
தவிர்க்கப்பட்டதாக பயணிகள்
தெரிவித்தனர். போக்குவரத்து அதிகாரிகள்
கூறுகையில், இன்று (நேற்று) கூடுதல்
சிறப்பு பேருந்துகள் 1,400ம், வழக்கமாக
செல்லும் பஸ்கள் 2,300ம் மாநகர
போக்குவரத்து கழகம் சார்பில் 3,700 பஸ்கள்
என மொத்தம் 7,400 பஸ்கள்
இயக்கப்பட்டன. கூட்ட
நெரிசலை தவிர்ப்பதற்காக, அந்த
நேரத்துக்கு புறப்பட வேண்டிய பஸ்கள்
மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டது.
போக்குவரத்து அமைச்சர்
செந்தில்பாலாஜி மற்றும் அதிகாரிகள்
உள்ளிட்டோரும் நேரடியாக களப்பணியில்
ஈடுபட்டிருந்தனர். 24 மணி நேரமும்
சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிரமாக
கண்காணிக்கப்பட்டது என்றார்.
Tuesday, October 21, 2014
சென்னையில் ஒரேநாளில் 7,000 பஸ்கள் இயக்கம்
Saturday, October 18, 2014
Friday, October 17, 2014
சு.சாமி பாச்சா பலிக்கலை: 'அம்மா'வுக்கு ஜாமீன் கிடைத்தது
(17 Oct) டெல்லி: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்க பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி உச்ச நீதிமன்றத்திற்கு வந்தார். ஆனால் நீதிபதிகள் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலி நரிமன் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்குமாறு வாதாடினார். இதையடுத்து நீதிபதிகள் ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி இன்று நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது சாமியை அதிருப்தியடைய வைத்துள்ளது. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க விட மாட்டேன் என்று சாமி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்.எல்.சி.யில் வெளிமாநில தொழிலாளர்களை நியமிப்போம் என்பதா?
என்.எல்.சி. நிர்வாகத்தின் தொழிலாளர் போராட்டத்தை நசுக்கும் சட்டவிரோத முயற்சிக்கு கடும் கண்டனம்!!
என்.எல்.சி. நிர்வாகத்தில் 44 நாட்களாக தங்களது அடிப்படை வாழ்வுரிமைக்காக ஒப்பந்த தொழிலாளர்கள் போராடி வரும் நிலையில் அவர்களை மிரட்டும் வகையில் "வெளிமாநில தொழிலாளர்களை நியமித்து பணிகளை மேற்கொள்வோம்" என்று அந்நிறுவனத்தின் மனிதவள பொதுமேலாளர் என்.பாலாஜி தெரிவித்திருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது தொழிலாளர்களின் போராட்டத்தை நசுக்கி ஒடுக்கிற சட்டவிரோத நடவடிக்கை.
என்.எல்.சி. நிறுவனம் என்பது வானத்தில் இருந்து வந்த குதித்தது அல்ல.. நெய்வேலியைச் சுற்றிய 50க்கும் மேற்பட்ட கிராமங்களின் பூர்வீக நிலத்தில் அவர்களது ஒட்டுமொத்த உழைப்பால் மட்டுமே வந்தது. கடந்த 30 ஆண்டுகாலத்துக்கும் மேலாக இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உழைத்து உழைத்து எந்த ஒரு முன்னேற்றத்தையும் காணாதவர்களே பல்லாயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள்.
இத்தனை ஆண்டுகாலமாக உழைத்து உழைத்து எந்த பலனையும் அனுபவிக்காத நிலையில்தான் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட அடிப்படையான வாழ்வுரிமைக் கோரிக்கைகளை ஒப்பந்த தொழிலாளர்கள் முன்வைத்து 43 நாட்களாக போராடி வருகின்றனர். கடந்த மாதம் 3-ந் தேதி முதல் ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்.
இதுவரையில் மொத்தம் 13 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் அனைத்து பேச்சுவார்த்தைகளுமே தோல்வியில்தான் முடிவடைந்துள்ளன.
ஏனெனில் ஒப்பந்த தொழிலாளர்களின் அடிப்படை கோரிக்கையான பணி நிரந்தரம், ஊதிய உயர்வு ஆகியவற்றை என்.எல்.சி. நிர்வாகம் அடியோடு நிராகரித்து வருகிறது. என்.எல்.சி. நிர்வாகத்தின் இந்த அடாவடித்தனமான போக்கினால்தான் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைகின்றன.
இந்த நிலையில்தான் என்.எல்.சி. நிறுவனத்தின் மனித வளபொதுமேலாளர் என். பாலாஜி, "வெளிமாநிலங்களில் இருந்து புதிதாக ஒப்பந்த தொழிலாளர்களை பணி அமர்த்துவோம்" என்று ஈவிரக்கமின்றி அறிவித்துள்ளார்.
என்.எல்.சி. நிறுவனம் என்பது தமிழ்நாட்டின் மக்களின் உழைப்பால் உருவானது. இந்த நிறுவனம் ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் துணை நிறுவனங்களை ஏற்கெனவே அமைத்திருப்பதே தமிழ் மக்களுக்கு செய்திருக்கிற மாபெரும் துரோகம். எங்கள் வீட்டு சொத்தை எடுத்துக் கொண்டு போய் அடுத்தவன் வீட்டில் வைப்பதை எப்படி அனுமதிக்க முடியும்?
இந்த நிலையில் நியாயமான வாழ்வாதார கோரிக்கைகாகப் போராடுகிற என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களை மிரட்டும் வகையில் என்.எல்.சி. நிர்வாகம் வெளிமாநில தொழிலாளர்களை நியமிப்போம் என்று அறிவித்திருப்பது எதேச்சதிகார ஆணவப் போக்காகும். இது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது சட்டவிரோதமானது. தொழிலாளர்களின் போராட்டத்தை நசுக்கிற, ஒடுக்கிற கொடூரமான நடவடிக்கை. என்.எல்.சி. நிர்வாகத்தின் இந்த சட்டவிரோத போக்கு மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
என்.எல்.சி.யின் இந்த அராஜகப் போக்கை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழ்த் தேசிய, மனித உரிமை இயக்கங்களும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைக்காக ஜாதி, மத, கட்சிகளைக் கடந்து ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
ஒப்பந்த தொழிலாளர்கள் நியாயமான உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் வெளிமாநிலத்தவரை பணிகளில் ஈடுபடுத்தினால் கடுமையான விளைவுகளை என்.எல்.சி. நிர்வாகம் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கிறேன். ஏற்கெனவே மராட்டிய மண்ணில் தங்களது மாநில மக்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் வெளிமாநிலத்தவர் தேர்வு எழுத வந்த போது ஓட ஓட விரட்டியடிக்கப்பட்ட சம்பவத்தை இந்த தருணத்தில் என்.எல்.சி. நிர்வாகத்துக்கு எச்சரிக்கையோடு சுட்டிக்காட்டவும் விரும்புகிறேன்.
என்.எல்.சி. தொழிலாளர்களின் வாழ்வுரிமைக் கோரிக்கைக்கு தீர்வு காண தமிழக அரசு உடனே தலையிட்டு நல்ல தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இதையடுத்து, அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, ஜெயலலிதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. தலைமை நீதிபதி தத்து, நீதிபதிகள் மதன் பி.லோகூர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகிறது. ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் ஃபாலி நரிமன் உச்சநீதிமன்றத்தில் வாதாடினார். பின்னர் ஜெயலலிதாவை ஜாமினில் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. 21 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் ஜெயலலிதா ஜாமினில் விடுதலை செய்யப்பட்டதையடுத்து அ.தி.மு.க.வினர் உற்சாகமடைந்தனர்.
போயஸ் கார்டன் மற்றும் கட்சி தலைமை அலுவலகத்தில் ஏராளமான அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் ஜாமின் மனுக்களையும் பரிசீலித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அவர்களுக்கு ஜாமின் வழங்க உத்தரவிட்டனர்
Wednesday, October 15, 2014
மனிதாபிமானத்திற்கு எதுவும் தடையில்லை ...
விபத்து நடந்தவுடன் அந்த இடத்திற்கு வந்த அதிகாரிகள் இருங்கள்
ஆம்புலன்ஸ் வரட்டும் என்று சொன்னார்கள் அந்த வழியாக வந்த திரு.சைலேந்திர
பாபு.ஐ.பி.எஸ், அவர்கள் உடனே இறங்கி
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் வேடிக்கை பார்க்கிறீர்கள் இந்த
டிராஃபிக்ல் ஆம்புலன்ஸ் எப்பொழுது வருவது என்று தானே அந்த மயங்கி ரத்தம்
சொட்டியநிலையில் இருந்த பெண்ணை. தன் பதவியையும் பொருட்படுத்தாமல் தூக்கி
தனது காரிலேயே மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார் ..
சின்ன சின்ன பதவியில் இருப்பவர்கள் கூட பந்தா காட்டிக் கொண்டு செய்ய
யோசிப்பார்கள் ... ஆனால் ஒர் உயர் அதிகாரி எதைப்பற்றியும் பொருட்படுத்தாமல்
செய்த காரியம் அனைவரையும் சிலிர்க்க வைத்தது ....
இதில் இருந்து ஒன்று புரிந்தது ...
மனிதாபிமானத்திற்கு எதுவும் தடையில்லை ...
நாம்தான் மனிதநேயத்திற்கு தடையாக இருக்கிறோம் ...
எப்பவுமே போலிசை திட்டி தீர்க்கும் புண்ணியவான்களே....
இதற்க்காகவாது பாராட்டலாமே !
புதிய தலைமுறை தொலைக்காட்சி நேர்பட பேசு நிகழ்ச்சி - தி.வேல்முருகன் ....
கத்தி, புலிப்பார்வை திரைப்படங்களுக்கு திரைப்பட தணிக்கைக்குழு அனுமதி அளித்தது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேர்பட பேசு நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பங்கேற்ற விவாதம்
Monday, October 13, 2014
உரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை பகிருங்கள்
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுக்காரர்கள் ஏமாற்றத்தான் செய்வார்கள்
#NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.
#FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
#VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது.
#LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ? மாப்ளே, நீ எந்த சோப்பு போட்ற?
#COKE மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அதன் விற்பனை, இந்திய பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்போ, இந்தியாகாரன் எல்லாம் இளிச்சவாயனா? இனிமே டிவி ல, coke குடிங்க, பெப்சி குடிங்கன்னு எவனாச்சும் வரட்டும், மவனே, நாஸ்தி தான்.
#வெளிநாட்டு கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS, மல்டோவா, PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.
#ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.
#PIZZA பற்றி பார்ப்போம்.
PIZZA விற்கும் கம்பனிகள்
"Pizza Hut, Dominos,
KFC, McDonalds,
Pizza Corner,
Papa John’s Pizza,
California Pizza Kitchen,
Sal’s Pizza"
இவை அமெரிக்கன் கம்பனிகள்.
PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது.
# கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ?
E 322 – எருது
E 422 – ஆல்கஹால்
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால்
E 476 – ஆல்கஹால்
E 481 – எருது & கோழி
E 627 – ஆபத்தான கெமிக்கல்
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.
# Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)
# நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!!
● மாகி யில், flavor (E-635 ) என்ற code இருக்கும்.
● கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-
E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.
தயவு செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். !!!
இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!
மனிதநேய விதைகளாய் மாறுவோம்..!
கால் வலியை விரட்டும் நெல்லி ரசம்
குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும் திறமை பெற்றது வெற்றிலை நெல்லி ரசம்.
தேவையான பொருட்கள்:முழு நெல்லிக்காய் 10, வெற்றிலை 20, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் 4, பூண்டு 6 பல், வால் மிளகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.
செய்முறை: நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு, பொடியாக நறுக்கிய பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும். அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம் வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.
இந்த நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில் குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதயநோயாளிகளுக்கும் ஏற்ற உணவாக அமைகிறது. எலும்பு புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
பலாபழத்தில் உள்ள சத்துக்கள்
பலாச்சுளைகள் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன. கொட்டைகள் உயிர்ச்சத்து பி1இ பி2 ஆகியவை கொண்டுள்ளன. பலாப்பலத்தில் புரதச்சத்துக்களும், மாவுச்சத்துக்களும், வைட்டமின்களும் அதிகம் காணப்படுகின்றன.
ஏ, சி மற்றும் சில பி வைட்டமின்களும் உள்ளன. தவிர கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட கனிமப்பொருட்களும் பலாப்பழத்தில் அடங்கியுள்ளன. வைட்டமின் ஏ உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும் வலுவை அளிக்கும்.
மேல் தோலை மிருதுவாக செய்யும், பல் தொடர்பான நோய்களைப் போக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. தொற்றுக்கிருமிகளை அழிக்கும் சக்தியும் இதற்கு உண்டு. பெண்கள் மாதவிடாய் காலங்களில் பலாபழத்தை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
குழந்தைகளுக்கு மந்தநோய் ஏற்படும். மூல நோய் உள்ளவர்கள் அதிகம் சாப்பிட்டால் தொல்லை அதிகமாகும். வாதநோய்க்கும் ஆகாது. இருமல் நோய் உள்ளவர்கள் சாப்பிட்டால் இருமல் அதிகமாகும்.
இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்
காய்கறிகளும் அதன் பயன்களும் !!!
இன்றைய நிலையில், 10 நபரில் 4பேர் நீரிழிவு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும், 3 பேர் இருதய சம்பந்தப்பட்ட நோயாளியாகவும், மீதம் 3 பேர் ஏதேனும் வேறு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும் இருப்பார்கள்.
உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள், கனிகள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டால் இது போன்ற நோய்கள் வராமல் பார்த்துக்கொள்ளலாம்.
அவற்றில் சிலவற்றை பார்ப்போம்:
1) வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.
2) வாழைத்தண்டு: இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.
3) வாழைக்காய்: இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.
4) பாகற்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
5) சேப்பங்கிழங்கு: கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்.
6) பீட்ரூட்: கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.
7) வெண்டைக்காய்: போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.
8) கோவைக்காய்: வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்தள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண், மூல நோயின் தாக்குதல் போன்றவற்றை நீக்கும்.
9) முருங்கைக் காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும். விந்து உற்பத்தியைப் பெருக்கும்.
10) சுண்டைக்காய்: புரதம், கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத் தூண்டும்.
11) சுரைக்காய்: புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
12) குடைமிளகாய்: வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.
13) சௌசௌ: கால்சியம், வைட்டமின் சி, சத்துக்கள் உள்ளன. எலும்பு, பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.
14) அவரைக்காய்: புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.
15) காரட்: உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
16) கொத்தவரங்காய்: இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
17) கத்தரி பிஞ்சு: கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.
சிதம்பரம் கோவிலில் 10ம் நூற்றாண்டு.. மழைநீர் வடிகால் கண்டுபிடிப்பு!
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், சிதம்பரம் நடராஜர் கோவிலில், பூமிக்கு அடியில், முறையான மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது, ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுட்ட செங்கல் : அப்போது, ஆயிரக்கால் மண்டபத்தின் கீழே, நிலவறை இருப்பது தெரியவந்தது. அதன் அமைப்பை ஆய்வு செய்தபோது, பருவமழைக் காலங்களில், கோவிலில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகாலாகவும் அது பயன்படுத்தப்பட்டது, தெரியவந்தது.மழைநீர் வடிகால், ஆயிரங் கால் மண்டபத்தின், மேற்கு பகுதியில் இருந்து, கோவிலின் நேர் வடக்கே உள்ள காளி கோவில் சிவப்பிரியை குளத்தை சென்றடைகிறது. இந்த கால்வாய், 1250 மீ., நீளத்தில், நிலமட்டத்தில் இருந்து, ௧,௧௯ மீ., ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ௭௭ செ.மீ., உயரம் மற்றும் ௬௩ செ.மீ., அகலத்தில் கால்வாயின் உள் அளவு உள்ளது. நன்கு அரைக்கப்பட்ட களிமண்ணால் உருவாக்கப்பட்ட சுட்ட செங்கற்களை பயன்படுத்தி உள்ளனர் என்பது, ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு செங்கல், 24 செ.மீ., நீளமும், 15 செ.மீ., அகலமும், 5 செ.மீ., கனமும் கொண்டதாக உள்ளது.செங்கற்களை இணைக்க சுண்ணாம்பு சாந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. 2 அடி அகலம், 5 அடி நீளம் கொண்ட பெரிய கருங்கல் பலகைகளை கொண்டு கால்வாயின் மேல்பகுதி மூடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கள ஆய்வாளர்கள் கூறியதாவது: தமிழகத்தை ஆட்சி புரிந்த சோழமன்னர்கள், கலை மற்றும் கட்டடக் கலைகள் மட்டுமல்லாமல், நீர் மேலாண்மையிலும், தனித்த கவனத்தை செலுத்தி உள்ளனர்.குறிப்பாக, கொள்ளிடத்தில் வரும் நீரினை, நேர் எதிர் திசையில் செலுத்தி, வீராணம் ஏரிக்கு கொண்டு வந்ததோடு அல்லாமல், அங்கிருந்து வெள்ளாற்றின் வழியாக, வடலுார் அருகே உள்ள வாலாஜா ஏரி வரை, 70 கி.மீ., தூரம் காவிரி நீரை கொண்டு வந்தனர்.இதனால், ௩0,000 ஏக்கர் விளைநிலங்கள் பயனடைந்தன. இதற்கு அவர்கள், ’பாம்பு போன்று வாய்க்கால் அமைத்தால், நீர் பனையேறும்’ என்ற நீர் மேலாண்மை விதியினை வகுத்து, அதன்அடிப்படையிலேயே, கொள்ளிடத்தின் குறுக்கே, வடவாற்றை அமைத்து, வடக்கு திசையில் நீரினை கொண்டு வந்து வீராணம் ஏரியில் சேர்த்து உள்ளனர்.
சோழர்கள் கண்டறிந்த அதே விதியினை அடிப்படையாகக் கொண்டே, பிற்கால மன்னர்களும் வீராணம் ஏரியில் இருந்து, வாலாஜா ஏரி வரை, காவிரி நீரினை கொண்டு வந்து உள்ளனர்.இந்த அற்புத விதியின் அடிப்படையில் தான், சிதம்பரம் நடராஜர் கோவிலில், மழைநீர் வடிகால் அமைக்கப் பட்டுள்ளது. கோவிலில் விழும் அதிகப்படியான மழை நீரை, 1,250 மீ., தூரம், எதிர் திசையில் கொண்டு சென்று, அதை வீணாக்காமல் தனி குளத்தில் சேகரித்து, நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சி போற்றத் தக்கது.
10 நுாற்றாண்டு : இந்த கால்வாயின் கட்டுமான அமைப்பையும், அதன் தொழில்நுட்பத்தையும் பார்க்கும்போது, பிற்கால சோழர்கள் காலத்தில், அதாவது, கி.பி.,10 முதல் 13ம் நுாற்றாண்டுகளில் இந்த கால்வாய் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.இதுபோன்ற கால்வாய் அமைக்கும் திட்டம், 5,000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிக மக்கள் பயன்படுத்தி உள்ளனர்.தமிழர்களும் அதுபோன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளனர் என்பதற்கு இதுவே தக்க சான்றாக அமைந்து உள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
Sunday, October 12, 2014
வெற்றிலை சாகுபடி நத்தமலை
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டம் லால்பேட்டை அருகில் வீராணம் ஏரிக்கரையில் அமைந்துள்ளது நத்தமலை எனும் கிராமம்.
Saturday, October 11, 2014
ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்
இரண்டு நிமிடம் ஒதுக்கி இதை படியுங்கள்!.
நண்பர்களே இதை ஷேர் பண்ணுங்க
இனிமே யாரையும்
ஏமாத்தமுடியாது இதை உங்களுக்கு தெரிஞ்சவங்க
மற்றும் படிக்கதேரியாதவங்களுக்கு சொல்ல
ி கொடுங்க நண்பர்களே !!.
ரேஷன்
கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம்
கிடைத்திருக்கும். காலையில் அரிசி, பருப்பு,
சர்க்கரை போன்றவைவந்திருக்கும். நாம்
மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால்,
அவைகள்இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை"
என்று சொல்லி விடுவார்கள். இனி அப்படி ஏமாற்ற
முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ்
அனுப்பினாலே போதும், அன்றைய
சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.
எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை: குடும்ப
அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட
குறியீடு) இடைவெளி (கடை எண்) என்ற முறையில்
எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
உதாரணமாக :- PDS 01
BE014 என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226,
9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய
ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால்
உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய
சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம். மேலே கண்ட
எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற
குறியீடு சென்னை (வடக்கு)
மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த
குறியீட்டினை தங்களதுமாவட்டக் குறியீட்டினைக்
கொண்டுமாற்றிட வேண்டும்.
அதுபோல் BE014 என்ற
கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப
அட்டையிலுள்ள முன்பக்க
கீழ்ப்பகுதியில்அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ்.
பதிவு செய்ய வேண்டும். குடும்ப அட்டை எண்ணில்
முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட
குறியீட்டு எண்ணாகும்.
உதாரணமாக, 01/G/0557070
என்ற குடும்ப அட்டை எண்ணில் “01”
என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும்.
இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப
அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த
குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய
விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.
எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில்(server) மாலை 5
மணிக்கு மேல் அதிகபளு ஏற்படுவதால் மேற்கண்ட
தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில்
உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம்
பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அவசியம்
நண்பர்களுக்கு பகிரவும்.
சைனஸ் பிரச்னை வராமல் எப்படித் தடுப்பது?
1. சளி மற்றும் ஒவ்வாமை (அலர்ஜி)யால் ஏற்படும்
மூக்கடைப்பு தொடர்ந்து இருக்குமானால்
சிகிச்சை எடுத்துக்கொள்ளவும்.
2. மதுப் பழக்கம், புகைப் பழக்கத்தைக் கைவிடவும்.
இது மூக்கில் உள்ள மெல்லிய சவ்வுகளைப் பாதித்து,
வீங்கச் செய்யும்.
3. ஒவ்வாமை இருக்குமானால், எதனால்
ஏற்படுகிறது என்று கவனிக்கவும்.
யோகா எவ்வாறு உதவுகிறது:
1) ‘அம்’ மந்திர உட்சாடனை சைனஸ் பிரச்சனைகள் தீர
உதவுவதுடன், வராமலும் தடுக்கிறது.
உட்சாடனையின்போது ஏற்படும் அதிர்வுகள்
சைனஸ்களில் கிருமிகள் சேராவண்ணம் தடுத்து,
சைனஸ்களை ஆரோக்கியமாக்குகின்றன. இதனால்
மூக்குக்கும் சைனஸ்களுக்கும் எவ்விதத் தடையும்
இல்லாமல் காற்று சென்று வருகிறது.
காற்று தடையில்லாமல் செல்வதால் சுரக்கப்படும்
திரவங்கள் சைனஸ்களில் இருந்து எளிதாக
அகற்றப்படுகின்றன.
2) ஆசனம் மற்றும் மூச்சுப் பயிற்சிகள்:
இவை அனைத்துமே உடலுக்கு நல்ல
ஆரோக்கியத்தையும், தளர்வு நிலையையும்
அளிக்கின்றன. அது மட்டுமில்லாமல் உடலின் எதிர்ப்புச்
சக்தியும் அதிகரிப்பதாக ஆரம்ப நிலை ஆய்வுகள்
தெரிவிக்கின்றன. இவற்றை உடற்பயிற்சிபோல்
செய்யாமல், தகுந்த விழிப்பு உணர்வுடன் மூச்சு, உடல்
மற்றும் மனம் ஒருங்கிணைந்தாற்போல்
இருக்குமாறு செய்ய வேண்டும்.
இவை மேற்கூறியது போல் சைனஸ்களின்
காற்றோட்டத்தைப் பாதுகாக்கின்றன.
3) யோகா, ரத்த ஓட்டத்தைச் சீர்செய்வதால் சைனஸ்களால்
ஏற்படும் தலைபாரம், முகத்தில், கண்களில்
வலி போன்றவற்றுக்கு உதவுகின்றன.
4) ஹடயோகாவில் உள்ள ஹடகிரியைகளில் ஒன்றாகக்
கருதப்படும் நேத்திக் கிரியைகள் சைனஸ் வியாதிகள்
வராமல் தடுப்பதற்கும், அதில் இருந்து நிவாரணம்
பெறவும் உதவுவதாகக் கூறப்படுகிறது.
நேத்தி என்பது மூக்கு, தொண்டைப் பகுதியை,
திரவம் அல்லது நூல்கொண்டு சுத்தம் செய்வது.
இது சளியை அகற்றுவதுடன் சவ்வுகளில் ஏற்படும்
வீக்கத்தைக் குறைத்து, மூக்குக்கும்
சைனஸ்களுக்கும் உள்ள தடையை அகற்றுகிறது.
நேத்திக் கிரியைகளை சரியான முறையில்
பயின்று பின்பற்றவும்!
மிளகு, மஞ்சள், தேன்
சளிப் பிரச்சனையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள 10
முதல் 12 முழு மிளகு எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதை உடைத்துக்கொள்ள வேண்டும், பவுடராக்கக்
கூடாது. அதை 2 ஸ்பூன் தேனில் ஓர்
இரவு அல்லது எட்டரை மணி நேரம் ஊறவைக்க
வேண்டும்.
காலையில்
அதை எடுத்து மென்று தின்றால்
சளி கரைந்துவிடும்.
அல்லது மஞ்சளை இரண்டு ஸ்பூன் தேனில்
கலந்து சாப்பிடலாம். அல்லது மிளகு, மஞ்சள் மற்றும்
தேன் ஆகியவற்றைக் கலந்து சாப்பிடலாம்.
அனைத்துப்
பால் பொருட்களையும் விட்டாலே சளி மிகவும்
குறைந்துவிடும்.
எந்தவித அலர்ஜியாக இருந்தாலும், தோல்
அலர்ஜி என்று மட்டுமல்ல,
வேப்பிலையை உருண்டை செய்து தேனில்
நனைத்து முழுங்கிவர ஒவ்வாமை சரியாகும்.
தினமும் தேன் சாப்பிடுவது சளி தொடர்பான
பிரச்சனைகளுக்கு மிகவும் உதவி செய்யும்.
புகையை பற்றி சில அதிர்ச்சியூட்டும் உண்மைகள்
இதய நோய்களுக்கு பகைவனாக
விளங்கும் புகையை பற்றிய சில
அதிர்ச்சியூட்டும் உண்மைகள்
இங்கு தரப்பட்டுள்ளன.
1. ஒவ்வொரு சிகரெட்டும் உங்கள் விலை மதிப்புள்ள
வாழ்க்கையிலிருந்து ஐந்து நிமிடங்களை பறித்துக்
கொள்கிறது.
2. ஒவ்வொரு புகை இழுப்பும் 4,000 வெவ்வேறு தீய
பொருட்களைக் கொண்டது. இதில் புற்றுநோய்
மற்றும் இருதய நோய் ஏற்படுத்தும் ரசாயனங்களும்
அடங்கும்.
3. சிகரெட்டின் எரிமுனையில் வெப்பநிலை 900
டிகிரி செல்சியஸ் ஆகும். இது நீரின்
கொதிநிலையை விட 9 மடங்கு அதிகமானது. இந்த
வெப்பநிலையில் சில ரசாயன மாற்றங்கள்
ஏற்பட்டு மிகவும் விஷமுள்ள
பொருட்களை விடுவிக்கப்படுகின்றன.
4. புகையில் 95 சதவீதம் வாயுக்கள் இருக்கின்றன.
அவற்றில் கார்பன் மோனக்சைடின் செறிவு 2-8 சதவீதம்
உள்ளது. 60 சதவீதம் கார்பன்
மோனக்சைடு செறிவு உயிருக்கு ஆபத்து என்பதை நினைவில்
கொள்ளுங்கள்.
5. எரியும் புகையிலிருந்து கிடைக்கும்
நச்சுக்கலவையில் நிகோடின் அதிகம் உள்ளது.
இது உடலின் பல முக்கியமான
உறுப்புகளை கடுமையாக பாதிக்கும்.
6. புகைப்பதால் ஏற்படும் மாரடைப்பால் இறக்கும்
வாய்ப்புகள் 60-70 சதவீதம் அதிகமாக இருக்கிறது.
இங்கு 40-25 மடங்கு மாற்ற முடியாத நுரையீரல்
நோய் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம். நுரையீரல்
புற்றுநோய் உருவாகும் ஆபத்து 10-25
மடங்கு அதிகம்.
7. உணவுக்குழாய், வயிற்று மற்றும்
மூச்சுக்குழாய்கள் ஆகியவற்றில் புற்றுநோய்
ஏற்படும் அபாயம் இவர்களுக்கு அதிகமிருக்கும்.
8. மனைவி கருவுற்றிருக்கும் போது, அவர் கணவர்
அருகில் புகைப்பிடித்தால்
குழந்தை வளர்ச்சி தடைபட்டு எடை குறைவாக
பிறக்கும். கருச்சிதைவு அபாயம் மற்றும் சிசுவின்
மரணத்திற்கு வாய்ப்பு அதிகம்.
மேலும் குழந்தையின் அறிவு வளர்ச்சி தாமதப்படும்.
மனவளர்ச்சி குன்றிப்போகும். குழந்தைப்பருவ
ஆஸ்துமா அந்த குழந்தைக்கு மற்ற
குழந்தைகளை காட்டிலும் அதிகம் வரும்.
9. இன்றைய காலக்கட்டத்தில் 20 வயதில் கூட
மாரடைப்பு வரும். இளைஞர்கள்
சிறு வயது முதலே "Passive Smoking'' என்ற வகையில்
புகை பிடிக்கும் அப்பாவின்
அருகிலிருந்து வளர்வதும் ஒரு காரணம்.
10. எரிமுனையிலிருந்து வரும்
புகையை சுவாசிப்பதும், பக்க வீச்சும் அதிக
தீமையானது. அது அப்பாவிகளான உங்கள்
குழந்தை மற்றும் குடும்பத்தினரின்
ஆரோக்கியத்தை குலைக்கும். உங்கள் மனைவிக்கும்
மாரடைப்பை ஏற்படுத்தும்.
11. ஒரு நாளைக்கு ஒரு பேக்கட்(Packet)
புகை பிடிப்போர் ஓராண்டில் 4000
சிகரெட்டை புகைக்கிறார்கள்.
சிகரெட்டுகளுக்காகவும், புகை பிடிக்கும்
பழக்கத்தால் வரும் நோய்க்காகவும் நீங்கள் செலவிடும்
தொகையை கொண்டு வீட்டில் பல நவீன
சாதனங்களை ஒவ்வொரு ஆண்டும் வாங்கலாம்.
12. 20 வயது முதல் சுமார் 40 வயது வரை தினமும்
ஒரு பாக்கேட் சிகரெட் பிடிப்பவரின்
சிகரெட்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினால்
அது எவரெஸ்ட் மலையின் உயரத்தை எட்டிப்
பிடிக்கும்.
இந்திய ரூபாய் தாள்களில் தமிழ் எண்ணுக்கு இடமளிக்குமா?
மொரீசியஸ் நாட்டில் உள்ளது போல இந்திய ரூபாய்
தாள்களில் தமிழ் எண்ணுக்கு இடமளிக்குமா இந்திய
அரசு?
எழுத்துப் பிழை திருத்திய பேராசிரியர் நன்னன்
அவர்களுக்கு பாராட்டுகள்!
மொரீசியஸ் நாட்டில் உள்ள 500 ரூபாய் நோட்டில் 500
என்பதை தமிழ் எண்ணால் எழுதியது போன்று, நம்
நாட்டு 500 ரூபாய் நோட்டில் தமிழ் எண்ணால்
எழுதப்படவில்லை என்று புலவர் நன்னன்
கவலை தெரிவித்து உள்ளார்.
இது குறித்து புலவர் நன்னன் கூறியதாவது:-
500 ரூபாய் நோட்டில் பிழை
மொரீசியஸ் நாட்டில் உலக தமிழ்
மாநாடு நடந்தபோது தமிழ்நாட்டில் இருந்து இந்திய
நாட்டு பிரதிநிதியாக நான் (புலவர் நன்னன்)
கலந்துகொண்டேன்.
அப்போது அந்த நாட்டில் உள்ள 500
ரூபாய் நோட்டை விழா மேடையில் பார்க்க நேர்ந்தது.
அந்த நோட்டில் 500 என்பது தமிழ் எண்ணாலும்,
எழுத்தாலும் எழுதப்பட்டிருந்தது.
அதுவும் தமிழ்
எண்ணால் எழுதியதை பார்க்கும் போது சந்தோஷமாக
இருந்தது.
ஆனால் தமிழில் 500 என்பதை “ஐந்நூறு”
என்று எழுதுவதற்கு பதிலாக, “ந்” என்ற
எழுத்தை விட்டுவிட்டு “ஐநூறு” என்று தவறுதலாக
எழுதப்பட்டிருந்தது.
இந்த தவறை, நான் அங்குள்ள தமிழ்
மொழி பேசும் அமைச்சரிடம்
விழா மேடையிலேயே சுட்டி காண்பித்தேன்.
அப்போது அவர் அங்குள்ள பணம் அச்சடிக்கும்
அதிகாரிகளை அழைத்து, “ஏன் தவறுதலாக
போட்டுள்ளீர்கள்?” என்று கேட்டார். அதற்கு,
“அதிகாரிகள் இந்தியாவில் உள்ள 500 ரூபாய் நோட்டில்
அச்சடித்திருப்பது போன்று தான், இங்கும்
போடப்பட்டுள்ளது?
என்று கூறினார்கள். பின்னர்
மொரீசியஸ் நாட்டு மந்திரி உத்தரவின் பேரில்,
அந்நாட்டில் உள்ள 500 ரூபாய் நோட்டில்
தவறு திருத்தப்பட்டு, “ஐந்நூறு” என்று சரியாக
அச்சடித்துள்ளனர்.
ஆனால் இந்தியாவில் உள்ள 500 ரூபாய் நோட்டில்
தவறை திருத்துவதற்கு தமிழ் அறிஞர் என்ற முறையில்
தனிப்பட்ட ஆளாக நின்று மத்திய அரசு மற்றும் ரிசர்வ்
வங்கிகளை தொடர்பு கொண்டு முயற்சித்தேன்.
ஆனால் அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இதனால் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை மூலம்
போராடி பல
ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்றேன்.
மொரீசியஸ் நாட்டில் உள்ள 500 ரூபாய் நோட்டில் தமிழ்
எண்ணாலும், எழுத்தாலும் அச்சடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நம் நாட்டில் உள்ள 500 ரூபாய் நோட்டில்
எழுத்தால் மட்டும் 500 என்று அச்சடிக்கப்பட்டுள்ளது.
மாறாக தமிழ் எண்ணால் எழுதப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்
நீங்கள் அடிக்கடி ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா?
(வெளியே சொன்னால்
வெட்க கேடு!!)
நம்ம ஊர் ஹோட்டல்களில்
எப்படி எல்லாம் டுபாக்கூர்
வேலை நடக்குது என்று அந்தக்
கடைக்காரர்களிடமே போட்டு
வாங்கிய தகவல்கள்...
இட்லி:
*****
பொதுவா இட்லி மெத்துனு
இருக்கணும்னா, ஒரு டம்ளர்
இட்லி அரிசிக்கு கால் டம்ளர்
உளுந்து தேவை. இரண்டையும்
தனித்தனியா ஊறவெச்சு,
தனித்தனியாதான் அரைக்கணும்.
அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு,
சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி
தயார். ஆனா, என்ன நடக்குது இங்க?
கடை இட்லி அரிசி கால் பங்கு,
ரேசன் அரிசி முக்கால் பங்கு,
உளுந்து கால் பங்கு,
ஜவ்வரிசி முக்கால் பங்கு,
நைட்டு ஊறவெச்ச பழைய சாதம்
கொஞ்சம்,
சோடா உப்பு எக்கச்சக்கமா...
எல்லாத்தையும் அரைச்சு,
மூணு மணி நேரம் வெயில்ல
வெச்சுட்டு எடுத்து சுட்டால்,
கும்முன்னு குஷ்பு இட்லி தயார்.
அந்த இட்லியும் மீந்துருச்சின்னா,
அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த
நாள் அரைக்கிற மாவுல
மீந்துபோன இட்லியைப்
போட்டு அரைச்சிடுவாங்க!
சோறு:
******
தரமான சோறுன்னா, சோத்துப்
பருக்கையை விரலில்
வெச்சு மசிச்சா மை மாதிரி
மசியணும். அப்பதான்
அது வயித்துக்கு ஒண்ணும்
செய்யாது.
அப்படி இருந்தா கஸ்டமர்ஸ் நிறைய
சாப்பிடுவாங்களே...
அதுக்காகத்தான் பெரும்பாலான
ஹோட்டல்ல முக்காப் பதத்துல
சாதத்தை எடுத்துடுவாங்க. சாதம்
பளிச்சுனு வெண்மையா
இருக்கவும், லேட் ஆனாலும்
காய்ஞ்சு போகாமல் இருக்கவும்
சாதம்
வேகும்போதே சுண்ணாம்புக்
கல்லைத் துணியில் கட்டி சாதத்தில்
போட்டுடுவாங்க.
அன்லிமிட்டட்னு அகலமா போர்டுல
எழுதி இருந்தாலும், இந்தச்
சோற்றைக் குறிப்பிட்ட
அளவுக்கு மேல நீங்க
சாப்பிடவே முடியாது!
புரோட்டா:
*********
பல ரோட்டுக் கடை ஹோட்டல்கள்ல
மைதா மாவோட
சோடா உப்பு கலந்து, அதுல
கழிவு டால்டாவை ஒரு பங்கு
மாவுக்குக் கால்
பங்கு டால்டா கணக்குல
(ஹோட்டலுக்குன்னே விக்கிற
மலிவு விலை டால்டா!)
கலந்து அடிச்சு அரை மணி
நேரத்துல புரோட்டா சுடுவாங்க.
புரோட்டா சும்மா பூ கணக்கா
பொலபொலன்னு உதிரும். ஆனா,
அத்தனையும் போங்கு புரோட்டா!
சால்னா :
*******
சிக்கன் கடையில் பொதுவா நாம
கொழுப்பு, ஈரல், குடல், தலை,
தோல், இதெல்லாம் வாங்க
மாட்டோம். அதேபோல மட்டன்
கடையில குடலோட
சேர்ந்து இருக்கிற
ஒட்டுக்கொழுப்பு, ஒட்டுக்குடல்
வாங்க மாட்டோம். இதை எல்லாம்
தூக்கிப்போடாம ஓரமாக்
குவிச்சுவெச்சிருப்பாங்க.
பழக்கமான கடைக்காரரா இருந்தா
விசாரிச்சுப் பாருங்க.
'ஹோட்டல்காரங்க
மொத்தமா வாங்கிட்டுப்
போயிடுவாங்க’னு அவரும்
யதார்த்தமா சொல்லிடுவார்.
அரைக் கிலோ கறியோட
இதை எல்லாத்தையும்
ஒட்டு மொத்தமாப்
போட்டு தூக்கலா கறி மசாலா,
மிளகாய்த் தூள்,
கொத்தமல்லித்தூள், கொஞ்சம்
மரத்தூள்
அல்லது குதிரை சாணத்தூள்
கலந்து, அஞ்சு ஸ்பூன்
அஜினாமோட்டா கலந்து
கொதிக்கவெச்சா அரை அண்டா
நிறைய திக்கான சால்னா ரெடி!
ஒரு முக்கியமான எச்சரிக்கைங்க...
****************************
தலையே போனாலும் சரி,
(ரோட்டுக்)கடைகள்ல
தலைக்கறி மட்டும் சாப்பிடாதீங்க.
பொதுவாகவே செம்மறி ஆட்டோட
தலையில புழுக்கள் இருக்கும்.
இது இயற்கையான விஷயம்தான்.
வீடுகளுக்கு வாங்குறப்ப
பெரும்பாலும் வெள்ளாட்டுத்
தலை தான் வாங்குவோம்.
செம்மறி ஆட்டுத்
தலை வாங்கினாலும்
கடைக்காரரு நம்ம கண்ணுல படாம
தலையைக் கொதிக்கிற தண்ணில
போட்டுட்டு, அப்புறம்
அதை எடுத்து தரையில
தட்டோ தட்டுன்னு தட்டி புழுவை
எல்லாத்தையும் கொட்டிட்டுதான்
மேலேயே எடுத்து வைப்பாங்க.
அதை வீட்டுக்கு வாங்கிட்டுப்போய்
நல்லா சுத்தம்
பண்ணி சாப்பிடுவோம். ஆனா,
மொத்தமா ஹோட்டலுக்கு
விக்கிறப்ப எல்லாம் செம்மறி ஆட்டுத்
தலையை இப்படி சுத்தம் பண்ண
மாட்டாங்க. அப்படியே கைமாதான்.
எல்லாத்தையும்விட முக்கியம்,
ஹோட்டல்களுக்கு சப்ளை
செய்யறதுக்குனே பஜாரில்
மளிகைப் பொருட்கள் குறைஞ்ச
விலைக்கு கிடைக்குது.
எல்லாமே கலப் படம். பாலீஷ்
செய்யப்பட்ட இலவச ரேசன்
அரிசியோட
பொன்னி அரிசி கலந்து விக்கிறாங்க
. உடைஞ்ச கழிவுப் பருப்பு, கேசரிப்
பருப்பைத் துவரம் பருப்புடன்
கலக்கிறாங்க. மிளகாய்த் தூள்,
கொத்தமல்லித் தூள், டீத்தூளோட
மரத் தூள், குதிரை சாணத்தையும்
கலக் கிறது எல்லாம் சகஜமப்பா. நெய்,
எண்ணெய் வகைகளோட பன்றி,
மாட்டுக் கொழுப்பு,
வனஸ்பதி மற்றும் நாள்பட்ட
கழிவு எண்ணெயையும் கலப்பாங்க.
சாதாரண ஹோட்டல் களிலும்
கையேந்தி பவன்
களிலேயுமே இப்படின்னா
டாஸ்மாக் பார் பத்திச்
சொல்லவே வேணாம். அதிலும்
குறிப்பா, சென்னை பேச்சுலர்
பாய்ஸ் ரொம்பக் கவனமா இருக்
கணும்!
சிதம்பர ரகசியம் - நம் முன்னோர்களின் அதிசயம்
கீழே கொடுக்கப்பட்டுள்ளது தான் உண்மையிலேயே சிதம்பர ரகசியமா என்பது அந்த நடராஜர் க்கு மட்டுமே வெளிச்சம் - இருப்பினும் இப்படியும் நம் முன்னோர்களால் செய்ய முடிந்ததா ?
எப்படி இதை செய்தார்கள் - என்பதே பெரும் ரகசியம் தான் ....
இணையத்தில் இதை படித்து விட்டு என்னை தொற்றி கொண்ட வியப்பு இன்னும் விலகவில்லை முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது..
அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்க ு பின் இருக்கும் சில அற்புதங்கள் சிலவற்றை நாம் அறிவோம் ..
பல வற்றை அறிய விஞானம் - ஆராய்ச்சி இருந்தும் அதன் முக்கியத்துவம் புரியாததால் சீண்டுவார் இல்லாமல் இருக்கின்றன ...
அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்...
அறிவியல் ,பொறியியல்,புவி யியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்....
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).
(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது,
இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவிய ியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது , இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்" மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள் ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது
Subscribe to:
Posts (Atom)