Search

Tuesday, October 21, 2014

சென்னையில் ஒரேநாளில் 7,000 பஸ்கள் இயக்கம்


சென்னையில் ஒரேநாளில்
7,000 பஸ்கள் இயக்கம்
சென்னை: தமிழகம் முழுவதும்
தீபாவளிப்
பண்டிகை இன்று கோலாகலமாக
கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, மாநிலம் முழுவதும்
9,088 கூடுதல் அரசு சிறப்பு பேருந்துகள் கடந்த
17ம் தேதி முதல்
இன்று அதிகாலை வரை இயக்கப்பட்டன. இதில்
சென்னையில் மட்டும் 4,753 பஸ்கள் ஆகும்.
தவிர மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில்
தீபாவளி வரை தினசரி 200 பேருந்துகளும்
கூடுதலாக இயக்கப்படுகின்றன. கடந்த 4
நாட்களாக சென்னையில்
தொடர் மழை பெய்து வரும்
நிலையில், சிறப்பு பேருந்துகள் அனைத்திலும்
பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தன.
இந்நிலையில் நேற்று மழை விட்டவுடன் பயணிகள்
கொஞ்சம் கொஞ்சமாக
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு வர
துவங்கினர். நேற்று மாலை 3 மணிக்கு மேல்
இன்று அதிகாலை 4
மணி வரை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில்
பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக,
தென்மாவட்டங்களான மதுரை,
திருநெல்வேலி, நாகர்கோயில் உள்ளிட்ட
பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் கூட்டம்
அதிகமாகவே காணப்பட்டது.
சிறப்பு பேருந்துகள் வேறு இயக்கப்பட்டதால்,
பஸ்கள்
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வரவே சுமார்
45 நிமிடங்கள் நீடித்தது. இருந்தாலும் மைக்
மூலம் அறிவித்தது, நடைமேடை சீட்டு,
பஸ்களை முறைப்படுத்தியது உள்ளிட்ட
நடவடிக்கைகளால் குழப்பம்
தவிர்க்கப்பட்டதாக பயணிகள்
தெரிவித்தனர். போக்குவரத்து அதிகாரிகள்
கூறுகையில், இன்று (நேற்று) கூடுதல்
சிறப்பு பேருந்துகள் 1,400ம், வழக்கமாக
செல்லும் பஸ்கள் 2,300ம் மாநகர
போக்குவரத்து கழகம் சார்பில் 3,700 பஸ்கள்
என மொத்தம் 7,400 பஸ்கள்
இயக்கப்பட்டன. கூட்ட
நெரிசலை தவிர்ப்பதற்காக, அந்த
நேரத்துக்கு புறப்பட வேண்டிய பஸ்கள்
மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டது.
போக்குவரத்து அமைச்சர்
செந்தில்பாலாஜி மற்றும் அதிகாரிகள்
உள்ளிட்டோரும் நேரடியாக களப்பணியில்
ஈடுபட்டிருந்தனர். 24 மணி நேரமும்
சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிரமாக
கண்காணிக்கப்பட்டது என்றார்.

No comments:

Post a Comment