Search

Saturday, October 11, 2014

இந்திய ரூபாய் தாள்களில் தமிழ் எண்ணுக்கு இடமளிக்குமா?


மொரீசியஸ் நாட்டில் உள்ளது போல இந்திய ரூபாய்
தாள்களில் தமிழ் எண்ணுக்கு இடமளிக்குமா இந்திய
அரசு?
எழுத்துப் பிழை திருத்திய பேராசிரியர் நன்னன்
அவர்களுக்கு பாராட்டுகள்!
மொரீசியஸ் நாட்டில் உள்ள 500 ரூபாய் நோட்டில் 500
என்பதை தமிழ் எண்ணால் எழுதியது போன்று, நம்
நாட்டு 500 ரூபாய் நோட்டில் தமிழ் எண்ணால்
எழுதப்படவில்லை என்று புலவர் நன்னன்
கவலை தெரிவித்து உள்ளார்.
இது குறித்து புலவர் நன்னன் கூறியதாவது:-
500 ரூபாய் நோட்டில் பிழை
மொரீசியஸ் நாட்டில் உலக தமிழ்
மாநாடு நடந்தபோது தமிழ்நாட்டில் இருந்து இந்திய
நாட்டு பிரதிநிதியாக நான் (புலவர் நன்னன்)
கலந்துகொண்டேன்.
அப்போது அந்த நாட்டில் உள்ள 500
ரூபாய் நோட்டை விழா மேடையில் பார்க்க நேர்ந்தது.
அந்த நோட்டில் 500 என்பது தமிழ் எண்ணாலும்,
எழுத்தாலும் எழுதப்பட்டிருந்தது.
அதுவும் தமிழ்
எண்ணால் எழுதியதை பார்க்கும் போது சந்தோஷமாக
இருந்தது.
ஆனால் தமிழில் 500 என்பதை “ஐந்நூறு”
என்று எழுதுவதற்கு பதிலாக, “ந்” என்ற
எழுத்தை விட்டுவிட்டு “ஐநூறு” என்று தவறுதலாக
எழுதப்பட்டிருந்தது.
இந்த தவறை, நான் அங்குள்ள தமிழ்
மொழி பேசும் அமைச்சரிடம்
விழா மேடையிலேயே சுட்டி காண்பித்தேன்.
அப்போது அவர் அங்குள்ள பணம் அச்சடிக்கும்
அதிகாரிகளை அழைத்து, “ஏன் தவறுதலாக
போட்டுள்ளீர்கள்?” என்று கேட்டார். அதற்கு,
“அதிகாரிகள் இந்தியாவில் உள்ள 500 ரூபாய் நோட்டில்
அச்சடித்திருப்பது போன்று தான், இங்கும்
போடப்பட்டுள்ளது?
என்று கூறினார்கள். பின்னர்
மொரீசியஸ் நாட்டு மந்திரி உத்தரவின் பேரில்,
அந்நாட்டில் உள்ள 500 ரூபாய் நோட்டில்
தவறு திருத்தப்பட்டு, “ஐந்நூறு” என்று சரியாக
அச்சடித்துள்ளனர்.
ஆனால் இந்தியாவில் உள்ள 500 ரூபாய் நோட்டில்
தவறை திருத்துவதற்கு தமிழ் அறிஞர் என்ற முறையில்
தனிப்பட்ட ஆளாக நின்று மத்திய அரசு மற்றும் ரிசர்வ்
வங்கிகளை தொடர்பு கொண்டு முயற்சித்தேன்.
ஆனால் அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இதனால் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை மூலம்
போராடி பல
ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்றேன்.
மொரீசியஸ் நாட்டில் உள்ள 500 ரூபாய் நோட்டில் தமிழ்
எண்ணாலும், எழுத்தாலும் அச்சடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நம் நாட்டில் உள்ள 500 ரூபாய் நோட்டில்
எழுத்தால் மட்டும் 500 என்று அச்சடிக்கப்பட்டுள்ளது.
மாறாக தமிழ் எண்ணால் எழுதப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment