(17 Oct) டெல்லி: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்க பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி உச்ச நீதிமன்றத்திற்கு வந்தார். ஆனால் நீதிபதிகள் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலி நரிமன் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்குமாறு வாதாடினார். இதையடுத்து நீதிபதிகள் ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி இன்று நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது சாமியை அதிருப்தியடைய வைத்துள்ளது. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க விட மாட்டேன் என்று சாமி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment